<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20119065\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://indiahelpline.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttps://indiahelpline.blogspot.com/\x26vt\x3d-780707518208911215', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

தகவல் மையம்

சமூக நல, சேவை அமைப்புகள் குறித்த தகவல்கள்

 

கண்தானம்


கண் தானத்திற்கு எழுதி வைத்தால் வீணாகப்போகாமல் கண் தேவைப்படும் யாருக்கேனும் உபயோகப்படலாம். இறப்பிற்கு பின் 6 மணி நேரத்திற்குள் கண் தானம் செய்யப்பட வேண்டும்.

கண் தானம் நல்ல முறையில் நடக்க கீழ்க்கண்ட செயல்கள் உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* இறந்தவரின் கண்ணின் மேல் ஈரப்பஞ்சை வைத்திருத்தல்
* இறந்தவரின் நேர் மேலே மின் விசிறி இருக்குமானால் அதை இயங்காமல் வைத்திருந்த்தல்
* இறந்தவரின் கண்ணில் தொற்று வராமல் தடுக்க antibiotic கண் சொட்டுக்களை
விடுதல்
* முடிந்தால் இறந்தவரின் தலையை 6 இன்சுகளுக்கு உயர்த்தி வைத்தல்..

மேலும் விபரங்களுக்கு சென்னையில், சங்கர நேத்ராலயாவில் இயங்கி வரும் C U Shah கண் வங்கியை 28271616 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் போதும்.
சுட்டி


š இப்பதிவை மின்னஞ்சல் செய்ய

 

ஆஷா




வசதியற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக செயல்படும் ஆஷா அமைப்பு தமிழ்நாட்டு அளவில் 112 ப்ராஜக்டுகளில் பங்கெடுத்து வருகிறது.

சென்னையில்
Support-A-Child என்ற பெயரில் இயங்கும் இயக்கத்தின் மூலம் நீங்கள் ஒரு குழந்தையின் ஒரு வருட படிப்பு செலவுக்கு ஆகும் பணத்தை செலுத்தி அக்குழந்தையின் ஸ்பான்ஸர் ஆகலாம். இதற்கு ஒரு வருடத்திற்கு ஒரு மாணவருக்கு ரூ.2000 முதல் ரூ.20000 வரை குழந்தையின் படிப்புக்கேற்ப வேறுபடுகிறது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஆன்லைனிலும் பணம் செலுத்த முடியும்.

வருடம் இருமுறை ஜனவரி மற்றும் ஜூனில் அந்த குழந்தையின் வளர்ச்சி குறித்த அறிக்கை மற்றும் அக்குழ்ந்தை எதிர்கொள்ளும் சவால்கள் முதலியவை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அக்குழந்தையும் நீங்களும் ஆஷா அமைப்பு மூலம் கடிதப்போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலும்.

ஸ்பான்ஸர்ஷிப் எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள்
பட்டியல்

ஆஷாவிற்கான நன்கொடை
அளிக்க

ஆஷாவிற்கு பொருளுதவியாக மட்டுமின்றி தன்னார்வலர்களாக இருப்பதன் மூலமும் உதவ முடியும். மேலும் விபரங்களுக்கு
சுட்டி

இது மட்டுமின்றி சமூக நலனுக்காக ஆஷா அமைப்பினர் நிறைய ப்ராஜக்டுகள் வைத்திருக்கிறார்கள். அனைத்து ப்ராஜக்டுகளின் விபரம்
இங்கே

*

உங்களின் விளக்கங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றை கீழ்க்கண்ட மின்னஞ்சலில் கேட்டு தெளியலாம்.

ராஜேஷ், தன்னார்வலர் - earajesh@yahoo.com
சந்த்ரபிரியா, தன்னார்வலர் - schandr8@visteon.com
ராஜாராம், ஒருங்கிணைப்பாளர் - rajaram@solnettechnologies.com
லஷ்மி, கருவூலர் - surlak@vsnl.net





š இப்பதிவை மின்னஞ்சல் செய்ய